×

தங்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தும் மக்கள் சிகிச்சை பெறாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை: மக்களை தேடி மருத்துவம் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களை கண்டறிந்த பிறகும், மக்கள் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறாமல் கவன குறைவாகவே உள்ளனர் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காவேரி மருத்துவமனை சார்பாக பிரபல மருத்துவர் சேகர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘உறுப்பு நீக்கல் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம்’ என்ற விழிப்புணர்வு திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கலந்துகொண்டு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவ கல்லூரிகளில் ரத்தநாள அடைப்பு பிரச்னை தொடர்பான படிப்பு உள்ளது. அது தொடர்பான ஒரு சிகிச்சை காவேரி மருத்துவமனையில் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி. சர்க்கரை நோய், உணவு பழக்கம், அதுமட்டுமின்றி சிகரெட் பழக்கம், சோம்பல் ஆகியவற்றால் ரத்தநாள அடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. மக்கள் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதின் நோக்கமே மக்களுக்கு உள்ள என்ன நோய் உள்ளது என்று ெசால்லியும் கூட சிகிச்சை பெறாமல் உள்ளனர்.

நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது பல துணை நோய்களை தடுக்கும். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது முக்கியம். வாழ்க்கை முறையில் மாற்றம் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் மக்களிடையே ஆரோக்கிய நடைபயணம் (Health Walk) தொடர்பான இயக்கம் தொடங்க அனுமதி கேட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஆரோக்கிய நடைபயணம் வார இறுதி நாளில் நடத்த உள்ளனர். முறையான ஓய்வு, சரிவிகித உணவு அதிக காய்கறிகள், பழங்கள், புரோடீன் இருக்க வேண்டும். சக்கரை நோயின் ஆரம்பகட்டத்திலேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று கை கால்களை பாதுகாத்து கொள்வது அவசியம் என்றார். இதில் திட்ட செயல் இயக்குனர் சேகர் பேசினார்.

The post தங்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தும் மக்கள் சிகிச்சை பெறாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Health Secretary ,Gagandeep Singh ,CHENNAI ,
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை